Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசன் காணாமல் போவார் என்றால் ஏன் எதிர்க்க வேண்டும்?

கமல்ஹாசன் காணாமல் போவார் என்றால் ஏன் எதிர்க்க வேண்டும்?
, புதன், 21 பிப்ரவரி 2018 (10:57 IST)
அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் கமல்ஹாசனை அரசியல் தலைவர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

 
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளனர். அதுவும், தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை இன்று கமல்ஹாசன், மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார். 
 
அதற்காக நேற்று இரவே ராமேஸ்வரம் சென்ற அவர் இன்று காலை 7.30 மணியளவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின், அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு சென்றார். ஆனால், அங்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. அதன் பின்பு, மீனவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.  இன்று மாலை அவர் கலந்து கொண்டு பேசும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்காக ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
 
இந்நிலையில், அவரின் அரசியல் வருகையை தமிழக அரசியல் தலைவர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
webdunia

 
தொடக்கம் முதலே அவரின் அரசியல் முடிவு அதிமுக  மற்றும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, எத்தனை கமல்ஹாசன்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது. அரசியல் களத்தில் கமல்ஹாசன் காணாமல் போவர் என்று அதிமுகவின் கூறினர்.
 
அதேபோல், நேற்று அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் “பருவநிலை மாறும் போது சில பூக்கள் மலரும். பின் உதிர்ந்து விடும். திமுக என்ற பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது” எனக் கூறியிருந்தார். 
 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “கமல்ஹாசன் தலைப்பு செய்தியாக வரலாம். ஆனால், தலைவனாக முடியாது” என கிண்டலாக கருத்து தெரிவித்தார்.
webdunia

 
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கூறியபோது “புத்திசாலியாக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் உண்மையிலேயே பிற்போக்குவாதி. திரைத்துறையில் இருந்து வந்து பலர் காணாமல் போய்விட்டனர்” எனக் கூறியுள்ளார்.
 
கேள்வி எளியது!. கமல்ஹாசன் அரசியலில்  காணாமல் போவார் என்றால் அவரை ஏன் இவர்கள் அப்பட்டமாக எதிர்க்க வேண்டும்?. அவர் அரசியல் கட்சி தொடங்கட்டும். கொள்கைகளை அறிவிக்கட்டும். மக்களை சந்திக்கட்டும். அவரை ஆதரிப்பதா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றிருக்கும் போது அவரை எதிர்ப்பதில் ஏன் அரசியல் கட்சிகள் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டும்?.
 
உண்மை இதுதான்! கமல்ஹாசன் எங்கே அரசியலில் சோபித்து விடுவாரே என்கிற பயம்தான் அவர்களின் கருத்துகளில் பிரதிபலிக்கிறது என பலரும் சமுக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊழல் வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உயரதிகாரி ராஜேஷ் ஜிந்தால் அதிரடியாக கைது