நாளுக்கு நாள் நகரங்கள் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதில் உள்ள சிறப்பு வசதிகளை விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பலரும் பல்வேறு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளில் அபார்ட்மெண்ட் வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கட்டுமான நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பாதுகாப்பு காவலர்கள் கொண்ட குடியிருப்பு வளாகம், பூங்கா, விழாக்கள் நடத்த தனி இடம், நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம் என ஒரு மினி ஊரையே குடியிருப்பு வளாகத்தில் வைத்திருக்கும் அளவிற்கு ஏராளமான வசதிகளை அறிவித்து வருகின்றனர்.
பல பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற ஏராளமான வசதிகளை தொடர்ந்து விளம்பரம் செய்வதால் சிறு, நடுத்தர கட்டுமான நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய வசதிகளை தவிர்த்த பிற வசதிகளை விளம்பரம் செய்ய ரியல் எஸ்டேட் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால் இந்த தடையை நீக்க வேண்டுமென பெரும் நிறுவனங்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K