பாமக நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணி ராமதாஸும் நாடகமாடுவதாக, வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ம.க.வில் நிறுவனர் மற்றும் தலைவருக்கு இடையே மோதல் வெடித்து, இருவரும் தனித்தனியாக பொதுக்குழுக்களை கூட்டி வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விருதாம்பிகை இந்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய விருதாம்பிகை, "காடுவெட்டி குருவை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இருவருமே நாடகமாடுகிறார்கள். வன்னியர் சமூகத்திற்கு ராமதாஸும், அன்புமணியும் எதுவும் செய்யவில்லை. ராமதாஸ் தனது மகளையும், அன்புமணி தனது மனைவியையும் அரசியலுக்கு கொண்டு வர நினைக்கிறார்கள்" என்றும் விருதாம்பிகை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விருதாம்பிகை, காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் தனியாக ஒரு புதிய அமைப்பை தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பா.ம.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.