பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் வருவதில்லை: ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (09:37 IST)
எத்தனை முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் ஓபிஎஸ் வருவதில்லை என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். 
 
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையை தீவிரமாக நடந்து வருகிறது என்பதும் பொதுச் செயலாளர் என்ற ஒற்றை தலைமையை பிடிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி மிக தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒற்றை தலைமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஓ பன்னீர்செல்வம் அவர்களை சமாதானப்படுத்த எடப்பாடிபழனிசாமி தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருவதாகவும் ஆனால் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள ஓபிஎஸ் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இதுகுறித்து கூறிய போது எத்தனை முறை ஓபிஎஸ் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது? என்றும் பேச்சுவார்த்தைக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வைத்து முயன்று இருக்கிறோம் என்றும் ஆனால் பன்னீர்செல்வம் வருவதில்லை என்றும் கூறினார் 
 
மேலும் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு பிள்ளையார் சுழி போட்டது ஓபிர் என்றும் தொண்டர்களை அரவணைத்து செல்லாததே அவரின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

அடுத்த கட்டுரையில்
Show comments