ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகாரிக்கப்படுகிறது. வரும் 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இது குறித்து கூறியுள்ளதாவது, யாரையும் அவமதிக்கும் எண்ணம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை. குறிப்பாக ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என தெரிவித்தார்.
மேலும் ஓபிஎஸ் செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள் மத்தியில் ஆதங்கம் நிலவி வருகிறது. தூங்குபவரை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை என குறிப்பிட்டார்.