Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகாரா? ஓபிஎஸ் விளக்கம்!

இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகாரா? ஓபிஎஸ் விளக்கம்!
, வெள்ளி, 24 ஜூன் 2022 (15:28 IST)
தேர்தல் ஆணையத்திடம் எந்த மனுவும் அளிக்கவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். 

 
அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகாரிக்கப்படுகிறது. வரும் 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 
 
இதன் பின்னர் நேற்று இரவு டெல்லி சென்ற ஓ பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக பொதுக்குழு குறித்து மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட முடிவு செய்திருப்பதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் அவர் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அவர் கூறியதாவது, குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக கூட்டணி வேட்பாளர் மனுதாக்கல் செய்யும் நிகழ்விற்காகவே டெல்லி வந்துள்ளேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று மனுதாக்கல் செய்தார். இதை தவிர தேர்தல் ஆணையத்திடம் எந்த மனுவும் அளிக்கவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிஎஸ்பிபி பள்ளியில் சீட் தர பணம் - பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்!