Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த மத நூலிலும் பாகுபாடு இல்ல.. ஆ.ராசா பேசியது ஓவர்! – ஆர்.பி.உதயகுமார் கருத்து!

Advertiesment
எந்த மத நூலிலும் பாகுபாடு இல்ல.. ஆ.ராசா பேசியது ஓவர்! – ஆர்.பி.உதயகுமார் கருத்து!
, புதன், 21 செப்டம்பர் 2022 (12:29 IST)
இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரது பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் நீலகிரி எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் நேற்று தமிழகம் முழுவதும் இந்து முண்ணனி அமைப்பினர் ஆ.ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
webdunia

இந்நிலையில் ஆ.ராசாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் “ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சு, எந்தவொரு நூலிலும் பிறப்பால் பாகுபாடு குறித்து பேசுவதில்லை. ஆ.ராசா நாட்டிற்கு தேவையானவை குறித்து பேசாமல் தேவையற்றவற்றை பேசியதால் நாடே கொந்தளிப்பில் உள்ளது.

ஆ.ராசா தன்னுடைய கருத்திற்கு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. அவரது கருத்து ஒட்டுமொத்த திமுகவின் கருத்தாகவே பார்க்கப்பட வேண்டும். முதலமைச்சர் இதை கண்டிக்கவில்லை என்றால் அதற்குரிய தண்டனையை பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி யாரும் பசியுடன் இருக்கக்கூடாது - துபாய் அரசு புது முயற்சி!