தமிழ்நாடு தரும் கொரோனா நிவாரண நிதியை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும் என எல் முருகன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாயில் முதல் தவணை 2000 ரூ வழங்கப்பட்டது. இதையடுத்து அடுத்த தவணையும் இப்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படி நிவாரணத் தொகையை ரேஷன் கடைகளில் வாங்குவதால் மக்கள் கூட்டம் அதிகமாகி தொற்றுப் பரவ வாய்ப்புள்ளதாக கூறி பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் இந்த யோசனை கிராமப்புற மக்களுக்கு மேலும் அலைச்சலை அதிகமாக்கும் என்றும், அப்படியே வங்கிக் கணக்கில் செலுத்தினாலும், மக்கள் அதை எடுக்க ஏடிஎம்களுக்கும், வங்கிகளுக்கும் செல்லதானே வேண்டும். அப்போது அங்கு கூட்டம் அதிகமாகாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.