Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரு, ஏசி, 3 பெட்ரூம் ஹோம் இருக்கா... அப்போ உனக்கு எதுக்கு ரேஷன்? தமிழக அரசு கறார்!

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (13:17 IST)
ரேஷன் முன்னுரிமை பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்கள் எவை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் அதிகமாக புழங்குவதாகவும், வசதியானவர்கள் மானியதில் பொருட்களை பெறுவதாகவும் தொடர்ந்து வந்த புகாரின் பெயரில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
அதன்படி முன்னுரிமைப் பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்கான விதிகளை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கீழ் கொடுக்கப்பட்ட விதிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட ரேஷன் முன்னுரிமை ரத்து செய்யப்படும் என்பதை அரசு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. 
முன்னுரிமை நீக்கப்படும் குடும்பங்களுக்கான விதிகள்... 
1. வருமான வரிச் செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பம், 
2. தொழில் வரிச் செலுத்துவோரை உறுப்பினராக கொண்ட குடும்பம், 
3. 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயியை கொண்ட குடும்பம், 
4. மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்றவரை உறுப்பினராக கொண்ட குடும்பம்,
5. 4 சக்கர வாகனத்தை சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள குடும்பம், 
6. வீட்டில் ஏசி வைத்திருக்கும் குடும்பம், 
7. 3 அல்லது அதற்கும் மேல் ரூம் கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம், 
8. வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம், 
9. அனைத்து ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் உள்ள குடும்பம் 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments