Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

நியுஸ் 18 சேனலில் குணசேகரன் பொறுப்புக்கு முயற்சிக்கிறாரா பாண்டே ? பரபரப்பு தகவல்!

Advertiesment
நியூஸ் 18
, சனி, 8 ஆகஸ்ட் 2020 (10:52 IST)
சமீபத்தில் நியுஸ் 18 சேனலில் இருந்து விலகிய குணசேகரன் இப்போது சன் நியுஸ் சேனலில் பணிக்கு சேர்ந்துள்ள நிலையில் நியுஸ் 18 சேனலில் பொறுப்பில் சேர ரங்கராஜ் பாண்டே முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக நியூஸ் 18 ஊடகத்தின் குணசேகரன் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகள் டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில் நியுஸ் 18 சேனலில் வேலை செய்யும் குணசேகரன் மற்றும் ஹசீப் முகமது ஆகியோர் ஒரு பக்க சார்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்து நியுஸ் 18 தலைமைக்கு கடிதம் அனுப்பினார். அதையடுத்து நியுஸ் 18 சேனலில் இருந்து ஹசீப் முகமது ராஜினாமா செய்தது அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் குணசேகரனின் அதிகாரங்களும் மட்டுப்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. அதுவும் இல்லாமல் குணசேகரனின் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் இருந்தும் ஒதுக்கப்பட்டார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறிய குணசேகரன் நேற்று சன் நியுஸ் தொலைக்காட்சியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் நியுஸ் 18 சேனலில் தலைமை ஆசிரியர் பதவிக்காக தந்தி டிவி புகழ் ரங்கராஜ் பாண்டே முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் எழுதியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் நிர்வாகமோ டைம்ஸ் ஆப் இந்தியாவின் பி.சிவக்குமார் என்பவரை அரசியல் பிரிவு தலைமையாக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதிக்கோட்பாடு பரப்பிய 2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கியது ஃபேஸ்புக்