Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தம்…. ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தம்…. ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!
, புதன், 9 பிப்ரவரி 2022 (10:02 IST)
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி காலவரையறை அற்ற வேலை நிறுத்தத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அது மட்டுமன்றி தமிழக மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு அந்த படகுகள் இலங்கை அரசால் ஏலம் விடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 தமிழக மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர்களை விடுதலை செய்து படகுகளை திருப்பி அளிக்க வேண்டும் எனவும், அதுவரையில் காலவரையறையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும், 11 ஆம் தேதி ராமேஸ்வரம் ரயில்நிலையத்தில் மறியலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

70 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!