Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை.. இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Siva
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (08:05 IST)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் நேற்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களை மார்ச் 5ஆம் தேதி வரை சிறையில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த பல வருடங்களாக, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்படும் நிலை தொடர்ந்து வரும் நிலையில், இதற்கான நிரந்தர தீர்வுக்காக இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த சூழலில், நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மார்ச் 5ஆம் தேதி வரை சிறையில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments