Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வனச்சரகர் பணியிடங்கள் காலியாக உள்ளன… ராமதாஸ் கோரிக்கை!

Advertiesment
வனச்சரகர் பணியிடங்கள் காலியாக உள்ளன… ராமதாஸ் கோரிக்கை!
, சனி, 26 ஜூன் 2021 (15:40 IST)

பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் காலியாக உள்ள வனச்சரகர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இது சம்மந்தமாக பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘தமிழகத்தில் வனச்சரகர் பணியிடங்கள் மிக அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள நிலையில், வனக்காப்பாளர்களுக்கு வனச்சரகர் பதவி உயர்வு வழங்குவது தாமதப்படுத்தப்படுகிறது. பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு, 10 மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை! வனக்காப்பாளர்கள் பலருக்கு 16 ஆண்டுகளில் கிடைத்திருக்க வேண்டிய இரண்டாவது பதவி உயர்வு 21 ஆண்டுகளாகியும் இன்னும் வழங்கப்படாதது சமூக அநீதி. எனவேவனச்சரகர் பதவி உயர்வை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலவச கல்வி திட்டம் - விண்ணப்பிக்க கோரிய சென்னை பல்கலைக்கழகம்