Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள அரசை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்: தமிழக அரசிற்கு ராமதாஸ் ஆலோசனை!

Webdunia
வியாழன், 31 மே 2018 (15:32 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  
 
அதுவும் கா்நாடகா சட்டசபை தோ்தலுக்கு பின்னா் பெட்ரோல் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. இந்நிலையில் 16 நாட்களுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. 
 
இதையடுத்த மக்களின் துயரை போக்க கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஜூன் 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.1 குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து, ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது பின்வருமாறு...
 
பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு ஆணையிட்டுள்ளது. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவு ஆகும். 
 
கேரள அரசின் இந்த அறிவிப்பிலிருந்து மற்ற மாநில அரசுகள், குறிப்பாக தமிழக அரசு பாடம் கற்க வேண்டும். தமிழக அரசின் வரி வருவாயில் பெரும் பகுதி மது விற்பனை மற்றும் எரிபொருள் விற்பனை மூலம் மட்டுமே கிடைக்கிறது. 
 
ஒரு மாநில அரசு அதன் செலவுகளுக்காக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீது அதிக வரி வசூலிப்பது வழிப்பறிக்கு இணையான செயல் ஆகும். மத்திய, மாநில அரசுகள் வரிக் குறைப்பு செய்வதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.70, ரூ.60-க்கும் கீழ் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments