Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிபா வைரசால் மேலும் இருவர் பலி - பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Webdunia
வியாழன், 31 மே 2018 (14:55 IST)
கேரளாவில் நிபா வைரசால் இன்று 2 பேர் பலியானதையடுத்து, இதன்மூலம் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 
 
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோழிக்கோட்டை சேர்ந்த மதுச்சூதனன்(55), முக்கம் பகுதியச்சேர்ந்த அகில்(28) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நிபா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பலர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புலியின் சிறுநீரில் மருத்துவ குணம்.. முடக்கு வாதத்தை குணமாக்கும் என கூறி விற்பனை..!

மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞர்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்..!

மோடியும் கெஜ்ரிவாலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

பயணிகள் விமானம் - ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல்.. அமெரிக்காவில் அதிர்ச்சி..!

உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி இருப்பதாக பொய் தகவல்! - மயில் மார்க் நிறுவனத்தினர் போலீஸில் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments