Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமானத்தை காப்பாற்றிய பணியாளர் – அதிபர் ட்ரம்ப் பாராட்டு !

Advertiesment
விமானத்தை காப்பாற்றிய பணியாளர் – அதிபர் ட்ரம்ப் பாராட்டு !
, வெள்ளி, 4 அக்டோபர் 2019 (14:21 IST)
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் விமானத்தின் மீது மோத இருந்த மற்றொரு வாகனத்தை செயலிழக்க செய்து ஊழியர் ஒருவர் பெரும் விபத்தைத் தடுத்துள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஓஹரே சர்வதேச விமான நிலையம் உள்ளது. அக் 1 ஆம் தேதி அங்கு வழக்கம்போல பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்க, விமானத்துக்கு அருகில் குளிர்பான வண்டி ஒன்று நின்றுகொண்டிருந்தது. வாகனத்தை நிறுத்தாமலேயே அதன் ஓட்டுனர் இறங்கி சென்றுள்ளார். அதனால் அதில் இருந்த குள்ர்பானங்கள் ஆகிஸிலேட்டரில் விழுந்து வண்டி வட்டமடிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் எப்படி வண்டியை நிறுத்துவது எனத் தெரியாமல் விழிக்க மான நிலைய பணியாளர் ஜார்ஜ் மணலாங் அருகில் இருந்த மற்றொரு வாகனத்தை எடுத்து சுழன்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி நிறுத்தியுள்ளார். இதனால் விமானம் மேல் மோதி நடக்க இருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பணியாளரின் சமயோசித அறிவைப் பாராட்டி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டிவிட்டரில் பாராட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Joker - சினிமா விமர்சனம்