சீக்கிரம் மீண்டு வாங்க பாலு சார்! – ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (12:10 IST)
சினிமா பின்னணி பாடகர் பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ள நிலையில் அவர் மீண்டு வர வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

சினிமா பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, தெலுங்கு என பல இந்திய மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். முக்கியமாக ரஜினிகாந்த் படங்களில் ஓபனிங் பாடல் எஸ்.பி.பி பாடினால் ஹிட் அடிக்கும் என்ற செண்டிமெண்டும் தமிழ் சினிமாவில் உண்டு. ரஜினியின் சமீபத்திய பேட்ட, தர்பார் முதற்கொண்டு ஓபனிங் சாங் பாடியவர் எஸ்.பி.பி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது எஸ்.பி.பி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் “இந்தியா மொழிகள் பலவற்றிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளார். அவர் சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments