Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போஸ்டர் ஒட்டாதீங்க… ஒட்டமாட்டோம்! – அலும்பு பண்ணும் ரஜினி ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:52 IST)
ரஜினி அரசியல் நுழைவு குறித்து தலைமை அறிவிப்பு இல்லாமல் போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என கூறப்பட்டுள்ள நிலையில் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் இன்னமும் கட்சி தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அவரது ரசிகர்கள், தொண்டர்கள் அவரது அரசியல் வருகை குறித்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தலைமையின் அறிவிப்பு வரும் வரை மாவட்ட நிர்வாகிகள் யாரும் போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநில நிர்வாகத்தின் ஆணையை ஏற்று போஸ்டர் ஒட்டப்போவதில்லை என தெரிவிக்கும் போஸ்டரை ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ளது வைரலாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் “ரசிகர்களுக்கு போஸ்டர் ஒட்ட வேண்டாம் என தலைமை உத்தரவு! தலைவா நீ எப்ப கட்சி தொடங்கினாலும் உங்களுக்குதான் மக்கள் ஆதரவு” என வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments