நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி என்பவர் விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது
இதுகுறித்து ராஜீவ் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ’அது ஒரு பேரின்ப காலம். அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் நாம் தமிழர் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஜீவ் காந்தி தனது அதிருப்தியை அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நாம் தமிழர் கட்சியில் தனிமனித சுதந்திரம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் ராஜீவ் காந்தி எப்போது வேண்டுமானாலும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அந்த எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. மேலும் ராஜீவ் காந்தியை அடுத்து மேலும் சிலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் சீமான் தரப்பினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது