Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியை நீங்கள் யார் எனக் கேட்டவர் பைக் திருட்டில் கைது !

Advertiesment
ரஜினியை நீங்கள் யார் எனக் கேட்டவர் பைக் திருட்டில் கைது !
, சனி, 22 பிப்ரவரி 2020 (14:05 IST)
ரஜினியை நீங்கள் யார் எனக் கேட்டவர் பைக் திருட்டில் கைது !

ஒரு லட்சத்து 47 ஆயிரம் மதிப்புள்ள  பைக்கை வெறும் 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார் சந்தோஷ். எனவே அவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்டம் முத்துகிருஷ்ணாபுரத்தில் வசிப்பவர் சாம்குமார். இவர் தனது எமஹா ஆர்.ஒன்.5 என்ற பைக்கை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். 
 
அந்த பைக்கை, சரவணன், விஜி என்ற இரண்டு திருடர்கள் திருடிக் கொண்டு  அந்த வாகனம் விற்பனைக்கு உள்ளதாக olxல் விளம்பரம் செய்தனர்.
 
இந்த பைக்கை பார்த்தம், ஸ்டெர்லை போராட்டத்தில் பங்கேற்ற சந்தோஷ் மற்றும் அவரது மணி ஆகிய இருவரும் olx ல் விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, 1,47,000 பைக்கை வெறும் 17 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளனர்.
 
இந்த பைக்கை ஒ.எல்.எக்ஸ்-இல்  பார்த்த சாந்தகுமார், அதில், குறிப்பிடப்பட்டிருந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுபேசினார்.
 
அப்போது, திருடர்களிடம் பைக்கை வாங்கியவர்களின் விவரத்தை கேட்டு தெரிந்து கொண்டுள்ளார் சாந்தகுமார்.  அதன்பின் பைக்கை வாங்கியது சந்தோஷ் என்பது தெரிந்த்தும், வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அந்தப் புகாரின்படி சந்தோஷ், மணி,சரவணம் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விஜி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
webdunia
ரஜினியை நீங்கள் யார் எனக் கேட்டவர் பைக் திருட்டில் கைது !
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது,  காயம் அடைந்து மருத்துவமனையில் இருந்த மக்களை காணச் சென்ற நடிகர் ரஜினியை நீங்கள் யார் என கேள்வி எழிப்பியது சந்தோஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளின் உயிரை குடித்த மருந்து: தமிழகத்தில் தடை!