தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு கோரியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தூத்துக்குடி போராட்டத்தின் போது வெடித்த கலவரத்தில் காயமடைந்த மக்களை மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது ரஜினி அவர்களை சென்று சந்தித்தார். அதன் பிறகு அவர் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளாகியது.
இதனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பபட்டது. ஆனால், தற்போது ரஜினி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரியுள்ளார்.
நான் ஒரு நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி விலக்கு கேட்டுள்ளார் ரஜினி.
மேலும், கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு தாமதிக்காமல் பதில் தர தயார் எனவும் ரஜினி தரப்பு மனுதாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.