Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல்முறையீடு பண்ணியிருக்கலாம்.. அவசரப்பட்டுட்டேன்! – ரஜினி ட்வீட்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (11:19 IST)
ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில் நீதிமன்றம் நடிகர் ரஜினிகாந்துக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் இதுகுறித்து ரஜினி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு சொந்தமான திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இப்போது அந்த மண்டபத்துக்கான கடந்த 6 மாதத்துக்கான சொத்து வரியைக் கட்ட சொல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் கடந்த சில மாதங்களாக மண்டபம் திறக்கப்படாததால் சொத்து வரியை குறைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு செப்டம்பர் 23ம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மனுவின் மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் ‘மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் வரை பொறுமை காக்காமல் நீதிமன்றத்தை நாடியதற்காக ரஜினிக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து மனுவை வாபஸ் பெறுவதாக ரஜினி தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் தற்போது தெரிவித்துள்ள ரஜினிகாந்த் “ராகவேந்திரா மண்டப விவகாரத்தில் நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறை தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்” என தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம் இறக்குமதி? எனக்கு தெரியாது.. இந்தியா குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்..

2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி நசுங்கிய ஆட்டோ.. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நால்வர்..!

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்ட காத்திருக்கும் பாகிஸ்தான் சகோதரி.. அழைப்பு வருமா?

எதிரி நாடு சீனாவுக்கு சலுகை.. நட்பு நாடு இந்தியாவுக்கு வரிவிதிப்பா? முன்னாள் அமெரிக்க தூதர் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்