Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார் - ராமதாஸ்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (11:09 IST)
விஜய் சேதுபதியின் 800 படம் குறித்து பாமக தலைவர் ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 5 மொழிகளில் 800 என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, கனிமொழி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி சபாபதி இயக்க உள்ளார்.
 
இந்நிலையில் தமிழ் அமைப்புகள் சில, முரளிதரன் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றும், ஈழப்போருக்கு எதிராகப் பல கருத்துகளை வெளியிட்டவர் என்றும் குற்றச்சாட்டு வைத்து இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். கடந்த சில நாட்களாக இந்த எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது.
 
இதனிடையே பாமக தலைவர் ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. 
800 திரைப்படத்தில், முத்தையா முரளிதரன் எனும் கோடாரிக் காம்பின் முழுமையான துரோக வரலாற்றை அறிந்து கொண்டு தான் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று நான் நம்பவில்லை. அறியாமை காரணமாகவே இப்படி ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். ஒருவேளை முத்தையா முரளிதரனின் துரோகங்களையெல்லாம் நன்றாக அறிந்த பிறகே அவர் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்றால் அவர் முரளிதரனை விட மோசமான துரோகியாக பார்க்கப்படுவார்.
 
ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இராஜபக்சே குடும்பத்தின் புகழ்ந்து பேசுவது தான் முத்தையா முரளிதரின் முழு நேரத் தொழில் ஆகும். முரளிதரன் இனப்படுகொலை செய்தவர்களுக்கும், போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு துணை நிற்பவர். இந்த உண்மைகள் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் இருக்கலாம்; அதனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.
 
முத்தையா முரளிதரனின் விளையாட்டுச் சாதனையை சித்தரிக்கும் படத்தில் மட்டும் தான் நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்படலாம். உண்மையில் 800 திரைப்படம் முரளியின் சாதனைகளைப் பற்றி மட்டும் பேசும் படமாக இருக்காது; அவர் மூலமாக இராஜபக்சே சகோதரர்களை உத்தமர்களாக சித்தரிக்கும் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்திருக்கும் என்பது தான் எங்களின் ஐயம்.
 
விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்தப்போவதில்லை. 
 
அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார்; மாறாக, தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments