Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியல் களத்தில் இறங்குவது எப்போது? ரஜினிகாந்த் பதில்

Advertiesment
அரசியல் களத்தில் இறங்குவது எப்போது? ரஜினிகாந்த் பதில்
, வியாழன், 23 நவம்பர் 2017 (01:02 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்தபோது 'பொர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று அரசியல் களத்தில் இறங்குவது குறித்து கூறினார். இந்த நிலையில் நேற்று மந்த்ராலயம சென்ற ரஜினி அங்கு தரிசனம் முடித்துவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பினார்.





அப்போது அவரை சூழ்ந்த பத்திரிகையாளர்கள் 'அரசியல் களத்தில் எப்போது இறங்குவீர்கள்? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, 'களம் இறங்குவதற்கு தற்போது அவசரம் இல்லை” என்று கூறினார். மேலும், 'காலா' பட சூட்டிங் முடிந்து விட்டது என்றும், தனது பிறந்த நாளுக்குப் பின்னர் ரசிகர்களைச் மீண்டும் சந்திக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் தெரிவித்தார்.

'தற்போது அவசரம் இல்லை” என்று ரஜினி கூறினாலும், அவர் அரசியல் கட்சியை ஆரம்பிக்க தயாராகிவிட்டதாகவும், மிக விரைவில் இதுகுறித்த செய்தி வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவியின் மர்மமான தற்கொலை: சத்யபாமா பல்கலையில் பயங்கர வன்முறை