Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்று 'தி'க்களுடன் கூட்டணி வைக்கும் ரஜினி! தனித்துவிடப்படும் கமல்

Advertiesment
மூன்று 'தி'க்களுடன் கூட்டணி வைக்கும் ரஜினி! தனித்துவிடப்படும் கமல்
, புதன், 31 அக்டோபர் 2018 (07:27 IST)
தினகரன், திருநாவுக்கரசு, திருமாவளவன் என 'தி' என்ற எழுத்தில் தொடங்கும் மூவருடனும் ரஜினியின் கட்சி கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கட்சி,கொள்கை அறிவிப்புக்கு முன்னரே பூத் கமிட்டியில் ஆட்கள் நியமிக்கப்படும் வரை பணியை முடித்துவிட்ட ரஜினி, கட்சி அறிவிப்புக்கு முன்னரே கூட்டணி வேலையையும் முடித்துவிட வேண்டும் என்று கருதுகிறாராம்

இப்போதைக்கு திருநாவுக்கரசரை தமிழக தலைவராக கொண்ட காங்கிரஸ், திருமாவளவனை தலைவராக கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் தினகரனை தலைவராக கொண்ட அம்முக ஆகிய மூன்று கட்சிகளுடன் ரஜினி கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

webdunia
இதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட கமல் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை கமல் சந்தித்திருந்தாலும், ரஜினியா? கமலா? என்ற கேள்வி வரும்போது காங்கிரஸ் ரஜினியை தேர்வு செய்யும் என்ற நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ரஜினி தனது முதல் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார் என்றும், முடிந்தவரை 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவார் என்றும் ஒரு கருத்து பரவி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி பூஜை செய்த ஜோசியர்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு