Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிய நண்பர் விவேக்... ரஜினி இரங்கல்!

Advertiesment
இனிய நண்பர் விவேக்... ரஜினி இரங்கல்!
, சனி, 17 ஏப்ரல் 2021 (10:11 IST)
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விவேக் பமரணத்திற்கு டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

 
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார் என்றும் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 15 அம் தேதி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.   
 
இதனிடையே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.  இவரது மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  
 
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், சின்ன கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி ஸ்டாக் இல்லாமல் மூடப்பட்ட தடுப்பூசி மையங்கள் !