Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதரர்களில் ஒருவன்… சத்யராஜ் இரங்கல்!

உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதரர்களில் ஒருவன்… சத்யராஜ் இரங்கல்!
, சனி, 17 ஏப்ரல் 2021 (08:54 IST)
நடிகர் விவேக்கின் மரணத்தை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர் என் தம்பி விவேக்.  அவர் மறைந்துவிட்டார் என்று சொல்வது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. வார்த்தைகளால் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிவிட முடியாது. தம்பி உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதரர்களில், ரசிகர்களில் நானும் ஒருவன்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு தவறால் ஐந்து வருடம் தண்டனை அனுபவித்தேன்… சிவகார்த்திகேயன் பட இயக்குனர் ஆதங்கம்!