கேளம்பாக்கம் செல்ல ரஜினி இ-பாஸ் வாங்கினாரா? சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (13:58 IST)
சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கிச் சென்றாரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு தனது மகள் செளந்தர்யா, மருமகன் விசாகன், பேரன் ஆகியோர்களுடன் லம்போர்கினி காரில் சென்றார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில்  சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கிச் சென்றாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா? என்பதை ஆய்வு செய்து தான் கூற முடியும் என்றும், நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் செல்ல காஞ்சிபுரம் மாவட்டத்தில் இ-பாஸ் வாங்கினாரா என்பதையும், பிறகு அங்கிருந்து சென்னை வருவதற்கு இ-பாஸ் வாங்கினாரா என்பதையும் மாநகராட்சி ஆய்வு செய்யும்’ என்று  தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments