'சோ'வை வளர்த்து விட்டதே கலைஞர்தான் ! ரஜினியின் மற்றொரு சர்ச்சைப் பேச்சு !

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (08:47 IST)
துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழா ஆண்டில் பேசிய ரஜினிகாந்த் சோவை வளர்த்து விட்டதே கலைஞர்தான் எனப் பேசியுள்ளார்.

துக்ளக் பொன்விழா ஆண்டு நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் ’சோ வாசகர் வட்டத்தை உருவாக்க வில்லை அவர் ஒரு இனத்தையே உருவாக்கினார்.  ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்லலாம். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லலாம். துக்ளக் பத்திரிக்கையாசிரியர்  சோவை வளர்த்துவிட்டது இருவர்தான். ஒருவர் பக்தவச்சலம் மற்றொருவர் கலைஞர். கலைஞர் துக்ளக்குக்கு இலவச விளம்பரமாகவே விளம்பரம் செய்வதாகவே என்னிடம் சோ  கூறியிருக்கிறார்.’ எனப் பேசினார்.

அதாவது கலைஞரின் எதிர்ப்புதான் துக்ளக்கை அதிகமாக வளர்த்து விட்டது என்ற பொருளில் அவர் பேசினார். ரஜினியின் முரசொலி, துக்ளக் ஒப்பீடு சமூக வலைதளங்களிலும் திமுகவினரும் மத்தியுலும் எதிர்ப்பை பெற்றுள்ளது சமீபகாலமாக ரஜினி எது பேசினாலும் அது சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments