Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிக்கு பதிலடி தருவதாக நினைத்து மறந்துபோய் பொங்கல் வாழ்த்து சொன்ன உதயநிதி!

Advertiesment
ரஜினிக்கு பதிலடி தருவதாக நினைத்து மறந்துபோய் பொங்கல் வாழ்த்து சொன்ன உதயநிதி!
, புதன், 15 ஜனவரி 2020 (06:50 IST)
ரஜினிக்கு பதிலடி தருவதாக நினைத்து கொண்டு மறந்துபோய் பொங்கல் வாழ்த்து சொன்ன திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் 
 
துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றபோது அதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது ’முரசொலி வைத்திருந்தால் அவன் திமுக காரன், துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி என்று அந்த காலத்தில் பேசுவார்கள். அந்த வகையில் துக்ளக் எல்லோரும் படியுங்கள்’ என்று கூறினார் 
ரஜினியின் இந்த பேச்சு திமுககாரர்களை ரொம்பவே உசுப்பிவிட்டது. துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றால் முரசொலி வைத்திருப்பவன் முட்டாளா? என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர். ரஜினியின் இந்த பேச்சு திமுகவினர் அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக தெரிகிறது இந்த நிலையில் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது கூறியதாவது: ‘முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
 
இந்த டுவீட் குறித்து மேலும் நெட்டிசன்கள் கூறியபோது உதயநிதி ஸ்டாலின் தனது டுவீட்டில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். முக ஸ்டாலின் உள்பட அனைவரும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள், உழவர் திருநாள் வாழ்த்துக்கள் என்று கூறிவரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் மறந்துபோய் பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லி விட்டதாகவும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரானால் சுடப்பட்ட உக்ரைன் விமானம்; தொடங்கியது கைது நடவடிக்கை