Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் கூறிய பால்காரர் குட்டிக்கதையால் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (08:05 IST)
செய்தி என்பது பால் போன்றது அதில் பொய் என்ற தண்ணீரை கலக்காமல் பத்திரிகையாளர்கள் செய்தியை கொடுக்க மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசினார்.
 
துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு ஊரில் ஒரு பால்காரர் பாலில் தண்ணீர் கலக்காமல் ஒரு லிட்டர் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவருக்கு போட்டியாக தண்ணீர் கலந்து இன்னொரு பால்காரர் லிட்டர் எட்டு ரூபாய்க்கு விற்பனை செய்தார். இதனால் தண்ணீர் கலக்காமல் விற்பனை செய்த பால்காரருக்கு வியாபாரம் குறைந்தது. இதனையடுத்து இன்னொரு பால்காரர் அதிக தண்ணீர் கலந்து ஒரு லிட்டர் 6 ரூபாய்க்கு விற்றார். இதனால் இருவருக்கும் வியாபாரம் குறைந்தது
 
இந்த நிலையில் ஒரு திருவிழா அந்த ஊரில் நடந்த போது பத்து ரூபாய் பால்காரர் தான் நல்ல பால் வைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் மீண்டும் எல்லோருமாக பால் வாங்க தொடங்கினர். தண்ணீர் ஊற்றி பால் விற்பனை செய்த இருவரும் கடையை காலி செய்துகொண்டு சென்றுவிட்டனர்.
 
செய்தியும் பால் போன்றது. அதில் தண்ணீர் என்று பொய் கலந்தால் நிச்சயம் ஒருநாள் மக்களுக்கு தெரிந்து விடும். எனவே பெய்யை கலக்காமல் செய்திகளை வெளியிடுங்கள் என்று அவர் பத்திரிகையாளர்களிடம் கேட்டுக்கொண்டார். ரஜினியின் இந்த பேச்சு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய - சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு

காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை கண்டனம்..

25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்: தவெக தலைவர் விஜய் உத்தரவு

விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்: டிடிவி தினகரன் கணிப்பு..!

சென்னையில் நாளை முதல் டீ,காபி விலை உயர்வு. டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments