Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேற லெவல் போங்க... அமித்ஷாவை எதிர்த்து வியப்பில் தள்ளிய ரஜினி!

Advertiesment
வேற லெவல் போங்க... அமித்ஷாவை எதிர்த்து வியப்பில் தள்ளிய ரஜினி!
, புதன், 18 செப்டம்பர் 2019 (13:01 IST)
அமித்ஷாவின் இந்தி குறித்த கருத்தை நடிகர் ரஜினிகாந்த் எதிர்த்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதுதான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் இந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது இந்தி மொழியால் மட்டுமே முடியும் என தெரிவித்திருந்தார். 
webdunia
இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி கூறியதாவது, எந்த்வொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு அது நல்லது. 
 
ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. அதேபோல் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்க கூடாது. இந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி திணிப்பை தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியாவில் எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ளார். 
webdunia
அதேபோல் பேனர்கள் வைக்கக்கூடாது என எனது ரசிகர்களிடம் நான் ஏற்கனவே கூறிவிட்டேன். அதை அவர்கள் கடைபிடிப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். ரஜினி வழக்கம் போல பாஜகவுக்கு ஆதரவாக கருத்தை வெளியிடுவார் என எதிர்ப்பார்த்த நிலையில் அதனை எதிர்த்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும், ரஜினி பாஜக ஆதரவாளர் என முத்திரை குத்தப்படுவதை அவர் விரும்பவில்லை என செய்தி வெளியான நிலையில் இந்த எதிர்ப்பும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்த முயன்ற நபர்..சிசிடிவி காட்சிகள்