Publish Date: Sat, 27 Apr 2019 (13:39 IST)
Updated Date: Sat, 27 Apr 2019 (13:42 IST)
ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் கிளை சார்பாக சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்றும் தன்னை நம்பிய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் அறிவித்தார். இதனால் ரஜினியின் மக்கள் மன்றம் வேகமெடுத்தது. அதையடுத்து சில நாட்களில் ஊடகங்களை சந்தித்த ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ரஜினி உள்ளாட்சித் தேர்தலிலும் பங்கேற்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என்ற தலைவரின் அறிவிப்புக்கு ஏற்றவாறு இதுவரை நம் மாவட்டம் முழுவதிலும் தீவிரமாக நடைபெற்றுவந்த அரசியல் கட்டமைப்புப் பணிகளை தொடர்ந்து செய்து, விடுபட்ட வேலைகளை முடிக்க வேண்டும். தலைவர் சந்திக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும், அவர் நிகழ்த்தப்போகும் அரசியல் மாற்றத்திற்கும் துணை நின்று தலைவரின் வெற்றியை உறுதியாக்குவோம் ‘ எனத் தெரிவித்துள்ளார்.
webdunia
Publish Date: Sat, 27 Apr 2019 (13:39 IST)
Updated Date: Sat, 27 Apr 2019 (13:42 IST)