Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி, கமல் இணைந்தால்....’நல்ல படம்’ கிடைக்கலாம் -அமைச்சர் ஜெயக்குமார்

Advertiesment
ரஜினி, கமல் இணைந்தால்....’நல்ல படம்’ கிடைக்கலாம் -அமைச்சர் ஜெயக்குமார்
, திங்கள், 2 மார்ச் 2020 (14:08 IST)
நடிகர் ரஜினி, கமல்ஹாசன் இருவரும்  இணைந்தால் 16 வயதினிலே மாதிரி நல்லபடம் கிடைக்கலாம் என தமிழக மீன்வளத்துறை அமைசர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
 
அரசு முறைப் பயணமாக இன்று சென்னையில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். 
 
அப்போது, ரஜினி - கமல் அரசியலில் இணையலாம்  என்ற பேச்சு எழுகிறது என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் எந்த பாதிப்பும் இல்லை; 
 
அதேசமயம் ரஜினி - கமல் இணைந்தால் 16 வயதினிலே மாதிரி ஒரு நல்ல படம் கிடைக்கலாம் என கிண்டலுடன் தெரிவித்தார்.
webdunia
ரஜினி, கமல் இணைந்தால்....’நல்ல படம்’ கிடைக்கலாம் -அமைச்சர் ஜெயகுமார்
சமீபத்தில், பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். அதற்கு ஆதரவாக கமல்ஹாசன் டுவிட்டரில் பாராட்டிப் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ்: சீனாவில் உணவின்றி செத்து மடியும் செல்லப்பிராணிகள்