Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி- கமல் இணைந்து நடிகர் சங்கத் தேர்தலைக் கூட சந்தித்தது இல்லை ! விஜயகாந்த் மகன் நக்கல் !

ரஜினி- கமல் இணைந்து நடிகர் சங்கத் தேர்தலைக் கூட சந்தித்தது இல்லை ! விஜயகாந்த் மகன் நக்கல் !
, ஞாயிறு, 1 மார்ச் 2020 (16:09 IST)
ரஜினி - கமல்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ரஜினி கமல் ஆகிய இருவரின் அரசியல் வருகையை கேலி செய்யும் விதமாக பேசியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சமீபகால ஓய்வுகளை அடுத்து அவரது மகன் விஜய பிரபாகரன் இப்போது அரசியலில் முன்னிலை படுத்தப் படுகிறார். தேமுதிக மேடைகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்நிலையில் மணப்பாக்கத்தில் சென்னை தெற்கு மாவட்டம் ஆலந்தூர் மேற்கு பகுதி தேமுதிக சார்பில் தேமுதிக கொடி நாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அவரது பேச்சில் ரஜினி, கமல் ஆகிய இருவரின் அரசியல் வருகை குறித்து பேசிய போது ‘ரஜினி, கமல் ஆகிய இரு ஜாம்பவான்களும் ஒன்றாக நடிகர் சங்க தேர்தலை கூட சந்தித்தில்லை. தேர்தலில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால் இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் சேர்ந்து செயல்படுவதாக இருந்தால் அவர்களது முடிவு.’ எனப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரோக்கியமற்ற ஆட்டுக்கறி விற்பனை! 500 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்!