Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாருக்குப் பதவி? – ரஜினி, ரசிகர்களோடு திடீர் ஆலோசனை

Advertiesment
யாருக்குப் பதவி? – ரஜினி, ரசிகர்களோடு திடீர் ஆலோசனை
, வெள்ளி, 26 அக்டோபர் 2018 (13:59 IST)
நடிகர் ரஜினிகாந்த் திடீரென இன்று தனது ரசிகர்களோடு கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ரஜினி அரசியல் வருகையை உறுதி செய்து மக்கள் மன்ற் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வந்த போது திடீரென தனது ரசிகர் மன்ற செயலாளராக லைகாவில் பணிபுரிந்த மகாலிங்கம் நடராஜன் என்பவரை நியமித்தார். மன்றத்திற்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத மகாலிங்கத்திற்கு இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கிய போதே ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு உருவானது. மேலும் மாவட்ட வாரியாகவும் முக்கியப்பொறுப்புகளில் உள்ளவர்களும் ரஜினியின் நீண்டகால ரசிகர்கள் இல்லை எனவும் கூறப்பட்டு வந்தது.

சமீபமாக ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் சிலர் ஒழுங்கு நடவடிக்கைக் காரணமாக நீக்கப்பட்டனர். இதனால் ரஜினி நசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. 30 வருடங்களுக்கும் மேலாக மன்றத்திற்காக உழைத்தவர்களை இப்படி மன்றத்திலிருந்து நீக்குவது முறையில்லை எனத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ரசிகர்களை ஒதுக்கிவிட்டு மன்றத்திற்கு சம்மந்தமே இல்லாதவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவின. மேலும் இந்த நடவடிக்கைகள் ரஜினியின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டது.

இத்தகையக் கருத்துகளால் எரிச்சலடைந்த ரஜினி அவதூறுகளுக்கு மறுப்புத் தெரிவித்து 2 நாட்களுக்கு முன்னால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘இந்த நடவடிக்கைகள் அனைத்தும் என் ஒப்புதலுடனேயே மேற்கொள்ளப்பட்டன. 30, 40 வருடங்கள் ரசிகராக இருந்ததாலெயே ஒருவர் பதவிக்கும், அரசியலுக்கும் தகுதியானாராக இருப்பார் என சொல்ல முடியாது. ரசிகர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு அரசியலில் வெல்ல முடியாது . மக்கள் செல்வாக்கும் வேண்டும் அப்போதுதான் வெற்றிப் பெற முடியும்’ என தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியைப் போக்கும் வகையில் இன்று ரசிகரகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரசிகர்களை மீண்டும் மன்றத்தில் சேர்ப்பது குறித்தும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்லாது...செல்லாது..மேல் முறையீடு போறோம் - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி