Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்களை சங்கின்னு சொன்னா திகார்தான்..! – திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி வார்னிங்!

Advertiesment
எங்களை சங்கின்னு சொன்னா திகார்தான்..! – திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி வார்னிங்!
, புதன், 4 நவம்பர் 2020 (13:10 IST)
சமீபத்தில் விருதுநகரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுகவை பாஜகவோடு ஒப்பிட்டு பேசிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் எதிர்வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் திமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு பாஜகவை போல மத பாகுபாடுகள் பேணுவதாகவும், அதற்கு ஆதரவு அளிப்பதாகவும் பேசியதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “கடவுள் பக்தியில் அதிமுகவும், பாஜகவும் ஒன்றுதான். நாங்கள் சங்கி அல்ல, சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது” என்று பேசியுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவ்வாறான வாக்குவாதம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமிதாப் வரலாற்றுல நடந்ததைதானே கேட்டார்? – வலுக்கும் கண்டனங்களும் ஆதரவும்!