Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூலி தொழிலாளிகளுக்காக நடமாடும் அம்மா உணவகம்! – முதல்வர் தொடங்கி வைத்தார்

கூலி தொழிலாளிகளுக்காக நடமாடும் அம்மா உணவகம்! – முதல்வர் தொடங்கி வைத்தார்
, புதன், 4 நவம்பர் 2020 (11:58 IST)
கூலி வேலை மற்றும் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவர்களது இடத்திற்கே சென்று உணவு வழங்க நடமாடும் அம்மா உணவக வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளியோர் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் நல்ல உணவு வழங்குவதற்கு அம்மா உணவகங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் கொரோனா காலத்திலும் மக்களுக்காக உணவு அளித்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் கூலி வேலை மற்றும் கட்டிட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்க அம்மா உணவகத்தின் நடமாடும் வாகன சேவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்டமாக சென்னையில் இரண்டு நடமாடும் அம்மா உணவக வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் மற்ற நகரங்களுக்கும் இந்த சேவை விரிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோ பிடன் ஆளுங்க ஏமாத்துறாங்க; ட்ரம்ப் குற்றச்சாட்டு! – அமெரிக்காவில் பரபரப்பு!