Publish Date: Thu, 06 Jan 2022 (08:55 IST)
Updated Date: Thu, 06 Jan 2022 (08:56 IST)
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் பதுங்கியிருந்த ராஜேந்திர பாலாஜியை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.