Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒமிக்ரானுக்கும் அஞ்சாத மக்கள்; அதிகரிக்கும் மாஸ்க் அபராதம்!

Advertiesment
ஒமிக்ரானுக்கும் அஞ்சாத மக்கள்; அதிகரிக்கும் மாஸ்க் அபராதம்!
, வியாழன், 6 ஜனவரி 2022 (08:18 IST)
சென்னையில் கொரோனா வேகமாக அதிகரித்து வரும் அதேசமயம் மாஸ்க் அணியாமல் செல்வதால் வசூலிக்கப்படும் அபராதமும் அதிகரித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வேரியண்டான ஒமிக்ரான், டெல்டா ஆகியவை வேகமாக பரவத் தொடங்கியுள்ளன. முக்கியமாக தலைநகரான சென்னையில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று சென்னையின் பல பகுதிகளில் மாஸ்க் அணியாமல் சென்ற மக்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டது. நேற்று ஒருநாளில் மட்டும் மாஸ்க் அணியாமல் சென்ற 2,286 பேரிடம் ரூ.4.83 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய நாட்களில் 2 லட்சம் வரை தினசரி அபராதம் வசூலான நிலையில் தற்போது அது இரட்டிப்பாகியுள்ளது. அபராதம் வசூலித்தும் மக்கள் பலர் மாஸ்க் அணியாமல் செல்வது தொற்றை அதிகரிக்க செய்யும் என அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் இரவுநேர ஊரடங்கு: விதியை மீறினால் கடும் நடவடிக்கை