சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் எந்த நேரத்திலும் அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, அமைச்சராக பொறுப்பேற்ற பின் திருத்தங்களில் 75 செண்ட் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கியுள்ளார் எனவும், அதன் மதிப்பு ரூ.8 கோடி ரூபாய் எனவும், இந்த சொத்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர் வாங்கிய சொத்து, இதுபற்றி விசாரிக்க வேண்டும் என மகேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 1996ம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி திருத்தங்கல் ஊராட்சி துணை தலைவராக இருந்த காலத்திலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையின் அறிக்கையை வருகிற ஆகஸ்டு 3ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை வருகிற ஆகஸ்டு 6ம் தேதி ஒத்தி வைத்தனர்.
அதிமுக அமைச்சரராக உள்ள ராகேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவுள்ள விவகாரம் அதிமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிச்சாமி தரப்பு அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி எல்லோருக்கும் தெரியும் படி சொத்துக்களை தனது பெயரில் வாங்கி வழக்கில் சிக்கியுள்ளதால், நீங்களாக ராஜினிமா செய்யுங்கள் அல்லது அமைச்சர் பதவியிலிருந்து உங்களை நீக்குவதை தவிர வேறு வழியில்லை என எடப்பாடி தரப்பிடமிருந்து ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவு பறந்துள்ளதாம். எனவே, எந்த நேரத்தில் ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.