Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளங்களில் மழை நீர் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன- அன்புமணி ராமதாஸ்

anbhumani
, சனி, 22 அக்டோபர் 2022 (14:37 IST)
சென்னை  மாநகராட்சியில், வடிகாலுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் நீர் தேங்கி ஆறுபோல் காட்சியளிப்பதாக எம்பி.அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை பெய்தால் ஒரு சில நிமிடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருக்கும்.  எனவே, பருவமழை காலங்களில் மழைநீர் தேங்குவதால் தவிர்க்கும் வகையில்  சென்னையில் 107 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிகால் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், வடிகாலுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் நீர் தேங்கி ஆறுபோல் காட்சியளிப்பதாக எம்பி.அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக  தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையாததால், கடந்த சில நாட்களில் பெய்த மழை நீர் தேங்கி அவை ஆறு போல காட்சியளிக்கின்றன. மற்ற பகுதிகளிலும் மழை நீர் வடிய தாமதம் ஆகிறது!
 

ALSO READ: அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனை- அன்புமணி ராமதாஸ் டுவீட்
 
இன்னும் பல இடங்களில் மழைநீர் வடிகால்களுக்கான  அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டாலும், பக்கவாட்டு சுவர்களும்,  மேல்தளமும் இன்னும் அமைக்கப்படவில்லை. அத்தகைய இடங்களில் தான் மழை நீர் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன.  இது மிகவும் ஆபத்தானது. இதே நிலை நீடித்தால் மழை நீர் தேங்குவது ஒரு புறமிருக்க, விபத்துகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அவற்றை தவிர்க்கும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகளையும், அமைக்கப்பட்ட இடங்களில் இணைப்பு பணிகளையும்  சென்னை மாநகராட்சி விரைந்து அமைக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி குறித்த சர்ச்சை கருத்து: அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு அண்ணாமலை கண்டனம்!