சிலமணி நேரத்தில் 21 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (07:47 IST)
அடுத்த சில மணி நேரங்களில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் சில மணி நேரங்களில் 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்னும் 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments