சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பொழிவு 10 செ.மீட்டரை தாண்டியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீ-யை தாண்டி மழை பதிவாகியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீட்டரை தாண்டியுள்ளது. மேலும் ஆவடியில் அதிக பட்சமாக 20 செ.மீ மழையும், சோழவரத்தில் 15 செ.மீ, திருவள்ளூரில் 13 செ.மீ, பொன்னேரியில் 12 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ, காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் 12 செ.மீ, ஸ்ரீபெரும்புதூரில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.