டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் முன்னதாக சில காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானாலும் அவை புயலாக வலுவடையாமலே கலைந்தன. எனினும் தொடர்ந்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் பல இடங்களில் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில் தற்போது அந்தமான் தீவுகள் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல்.