காலை முதலே டெல்டாவை குறி வைத்த மழை! இன்று எங்கெல்லாம் மழை? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth K
திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (10:23 IST)

இன்று காலை முதலே டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 14ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதலாக தொடர்ந்து பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

நேற்று இரவு முதலே தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை காலை வரையிலும் நீடித்தது.

 

இந்நிலையில் இன்று கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments