தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் 8 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை 14ம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K