Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (16:15 IST)
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில்    உள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சியினால், இன்று முதல் வரும் 19 ஆம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

மேலும், வரும் மார்ச் 20 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யமுனை நதியில் விஷம்?! 14 பக்க அறிக்கையை காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்! - தேர்தல் ஆணையத்தின் ரியாக்‌ஷன் என்ன?

சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம்.. ஒரு நபருக்கு ரூ.1.25 லட்சம்..! - விண்ணப்பிப்பது எப்படி?

எவ்வளவு பணம் எண்ண முடிகிறதோ, அவ்வளவும் போனஸ்.. சீன நிறுவனத்தின் வித்தியாசமான அறிவிப்பு..!

சென்னையில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டி கொலை.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்.. எந்த இணையதளத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments