Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை வெயிலில் இருந்து ரிலாக்ஸ்.. 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 22 மார்ச் 2024 (13:35 IST)
சென்னை உள்பட தமிழக முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கடும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளின் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருவதாகவும் இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவு கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments