தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக ஏப்ரல் மாதம் தான் தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரிக்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதமே அதிக வெப்பம் உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக படிப்படியாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் மார்ச் 19ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும் இருபதாம் தேதி மட்டும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலையை இருக்கும் என்றும் இயல்பை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.